தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு!

 
School Education

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்படி பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அரசு பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2000 அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் 17,53 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். ரூ.83 கோடி செலவில் குழந்தைகள் நல மைய கட்டடங்கள் அமைக்கப்படும் என கூறினார்.