தமிழக பட்ஜெட்டில் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு!

 
thangam theenarasu

தமிழ்நாட்டில் உயர்க்கல்வித்துறைக்கு 8,494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, குடிமைப்பணி தேர்வுகளில் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு தயாராகுபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். 

2025 - 26ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ. 2500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும். இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு துறைக்கு
ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மேம்பாட்டிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகமாக மாற்றிட ரூ.500 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.