"தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

 
minister ma subramanian

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு கட்டுப்பாடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உணவகங்கள், தியேட்டர்கள், மெட்ரோ ரயில் ஆகியவை  50 சதவீதத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மழலையர் விளையாட்டு, பள்ளிகள் நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி இல்லை.  அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது.

ttn

அந்த வகையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொங்கல் பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மருத்துவமனையில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது ,இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது, கடைகளின் நேரத்தை குறைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று ஏற்கனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசித்த நிலையில், இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

ttn

இந்நிலையில் கொரோனா  பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையில் பொது முடக்கம் அமல்படுத்துவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா மற்றும் ஒமிக்ரான்  பரவல் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாவதால் சனிக்கிழமைதோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.