சென்னையில் நாளை குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படும்!!

 
train

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் குறைந்த அளவிலேயே சென்னையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 10-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தொடர்ந்து தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த சூழ்நிலையில் , நேற்று முன் தினம் முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் ,கடைகள் ,உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

train

அத்துடன் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இருப்பினும் அத்தியாவசிய பணிகள்,  மருத்துவப்பணிகள், மருந்தகங்கள் ,பால் விநியோகம் ,ஏடிஎம் மையங்கள் ,சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொது போக்குவரத்து, ரயில் மெட்ரோ ரயில்கள் ஆகியவை இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

train

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து புறநகர்களுக்கு மொத்தம் 340 மூன்று ரயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு 113 ரயில் சேவைகளும், கும்மிடிபூண்டிக்கு  60 ரயில்களும் ,சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 30 ரயில்களும், செங்கல்பட்டுக்கு 120 ரயில் சேவைகளும் இயக்கப்படும். சென்னை கோட்டத்துக்கு உட்பட அனைத்து முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.