ஃப்ரிட்ஜ் முதல் ரூ.10,000 வரை! அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளால் அதிரும் தமிழகம்!

 
1

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

1.வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

2. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகயைக ரு.2,000 வழங்கப்படும். 

3. மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் கொண்டு வரப்படும். 

4. வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் கொண்டு வரப்படும். 

5. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

6. வேலைக்கு செல்லும் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். 

7. முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 

8. மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுப்படி செய்யப்படும். 

9. வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

10. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தரமான, விலையில்லா சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும்.

11. இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.

12. குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்

13. ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.

14. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

15. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில்  வாங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

16. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து, சொந்த ஆட்டோ இல்லாதவர்கள், புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 75,000 மானியமாக வழங்கப்படும்

17. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

18. மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

 19. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும்; +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்

20. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த படிப்படிய்க மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். 

21. அரசுப் பள்ளி மாணவர்களுககான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இப்படியாக இளைஞர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில், அதிரடி அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.