சர்க்காரியா கமிஷன் முதல் ED ஆவணங்கள் வரை.. ஆதாரங்களுடன் CM விஜய் பேச்சு..!

 
1

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று (செப்.7) சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு பேசி வருகிறார். அப்போது, வீராணம் திட்ட டெண்டரில் 2.5% கமிஷன் கேட்டதாக மாறன் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், திமுகவுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆவணங்களை காட்டி பேசிய விஜய், திமுக குறித்தான குற்றங்களை அடுக்கினார். அதேபோல், பார்டி பண்ட் வாங்கப்பட்டதாகவும், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டினார்.

இதகுறித்து பேசிய அவர், “கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். லோனுக்கு இஎம்ஐ கட்ற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கி இருக்காங்க. இந்த 29 லட்சம் மட்டும் இல்ல. முரசொலி கட்டடம் கற்றதுக்காக எல்லாம் கொடுத்திருக்காங்க. காசா குடுத்துருக்காங்க.. பொருளாக வாங்கி கொடுத்திருக்காங்க..

மிஸ்டர் கிளீன், மிஸ்டர் கிளீன் என சொல்லிக் கொள்கிறார்களே.. அப்பவே அப்படி என்றால், இப்போது எப்படி இருக்கும். 7.5% முதல் 10 சதவீதம் முதல் பார்ட்டி பண்ட் வாங்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்கின்ற தப்பையே முறையாகவும் ஒழுங்காகவும் செய்து உள்ளார்கள்.

அமலாக்கத்துறையின் இரண்டு துறை file ஓபன் செய்ததற்கு இப்படி இருக்கிறது என்றால் மற்ற துறையை file's ஓபன் செய்தால் எத்தனை பூதம் கிளம்பி வரும் என்று தெரியவில்லை. ஆதாரம் வேண்டும்.. ஆதாரம் வேண்டும் என்றீர்கள்.. போதுமா ஆதாரம்.

தப்பு செய்துவிட்ட தப்புல மாற்றுகிறவர்கள் ஒரு பக்கம். அந்த தப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று யோசித்து வைத்துவிட்டு மாட்டிகாதவர்கள் இன்னொரு பக்கம். நமது தோழர்கள் எல்லாம் இரண்டாவது கேட்டகிரி.

திமுக மேடையில் பேசும்பொழுது பெருமையாக ஒன்று கூறுவார்கள். திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்காது.. தப்பு நடக்கின்ற இடத்தில் திமுக இருக்காது என்று கூறுகிறார்கள்.

நான் அதை மாற்றிக்கூறுகிறேன். திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்கும், தப்பு நடக்கிற இடத்தில் தான் திமுக இருக்கும். ஊழல் என்று சொல்லிவிட்டால் போதும் அனைவரும் எழுந்து நின்று ஆதாரம் கொடு என கேட்பார்கள். ஆனால் இதுவரை நாங்கள் ஊழல் செய்தது இல்லை எனக் கூற மாட்டார்கள். ஊழல் செய்பவர்கள்தான் ஆதாரம் கேட்பார்கள், ஊழல் செய்யாதவர்கள் அதைப் பற்றி கண்டுக்கவே மாட்டார்கள்” என கொந்தளித்து பேசினார்.