“இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார்“- என். ஆனந்த்

 
ச் ச்

இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார் என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “தங்கமான அண்ணன் கிடச்சிருக்காரு... இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார். செங்கோட்டையன் அண்ணே...  தெளிவா சொல்றேன் இன்னைக்கு.. எங்க தளபதியும் சரி.. நீங்களும் சரி.. என்ன சொன்னாலும் நாங்க அத கேட்டு செய்வோம்ண்ணே. எத்தனை கண்டிஷன் போட்டாலும் தலைவரை ஈரோட்டுக்கு வர வைப்பேன்” என்றார்.