இனியாவது அடுத்தவர்களை மிரட்டிப் பலிகடாவாக்கும் அற்ப செயலை செய்வதை விடுங்க - நயினார் அட்டாக்..!

 
Nainar

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை;

திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தவெக அரசு வேண்டுமென்றே மீறியுள்ளது என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. தனது தவறை மறைக்க, அறங்காவலர்கள் மீது பழியைச் சுமத்துவதோடு, ஸ்தானீகர்களின் பெயர்களையும் தேவையின்றி இவ்விவகாரத்தில் இழுத்திருக்கிறது முதல்வர் ஜோசப் விஜய் அரசு.

வரம்பை மீறிச் செயல்பட்ட இந்த ஹிந்து-விரோத தவெக அரசு தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் ஸ்தானீகர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கடிதங்களைப் பெற்றதாகத் தகவல்கள் வருகின்றன. இது உண்மையெனில், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இப்படித் தொடர்ந்து, இந்துக்களின் உரிமைகளை முடக்குவதில் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசு காட்டியிருந்தால், இந்நேரம் பெண் கலெக்டரிடம் முறைதவறி நடந்து கொண்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருப்பார்! இனியாவது, ஹிந்து விரோதத்துடன் தான் இழைக்கும் தவறுக்கு, அடுத்தவர்களை மிரட்டிப் பலிகடாவாக்கும் அற்பச் செயலைச் செய்வதை விடுத்து, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தங்களது நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைக் களைய முற்பட வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.