பால் விலை உயர்வு முதல் டாஸ்மாக் ஊழல் வரை! திமுக அரசின் "மக்கள் விரோத" போக்கைச் சாடிய பியூஷ் கோயல்..!
Apr 18, 2026, 16:02 IST1776508332417
.தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் 29 வினாடிகள் கொண்ட ஏஐ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் என தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம். மாற்றத்திற்கான வழிகாட்டி தேஜ கூட்டணியை ஆதரிப்போம். இவ்வாறு பீயூஷ் கோயல் கூறியுள்ளார்


