கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் முதல் மேகதாது அணை வரை! மதுரையில் அனல் பறக்கப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்!
மதுரை தமுக்கத்தில் நடந்த புத்தக திருவிழாவை அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். இவ்விஷயத்தில் அந்த அரசு அடவாடியாக செயல்பட்டால், அது இந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும். மத்திய அரசு இதை அனுமதிக்க கூடாது.
அரசு வழக்கறிஞர் நியமன விவகாரத்தில் தகுதியான நபர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் சுதந்திரத்துடன், துாய்மையாக செயல்படுவார்கள். திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நவ.,17ல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதைப்பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தை தி.மு.க., திசைதிருப்புகிறது. கலெக்டரின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படம் பயன்படுத்துவது தவறு. சோஷியல் மீடியாவில் பார்த்தேன் என்று அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். அதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி 'பால்டாயில்' குடித்தார் என்று இருக்கிறது. அவர் அப்பாவை பற்றியும் நிறைய இருக்கிறது. அதைப்பற்றி நாங்கள் கேள்வி கேட்க முடியுமா. இதுபோன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும்.
ஆறு மாத த.வெ.க., அரசு நிறைவு பெற்றதால், முதல்வர் விஜய் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முன்மொழிந்தால் அதை எதிர் கொள்ள த.வெ.க., அரசு தயாராகவே உள்ளது என்றார்.

