சமையல் எண்ணெய் முதல் தங்கம் வரை... ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!

 
1

 தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உலகளாவிய சவாலான சூழ்நிலையில், நாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில், பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே பணிபுரிய, இயன்றவரை முன்னுரிமை வழங்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண் டும். அத்தியாவசியமற்ற வெளி நாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை நோக்கி செல்ல வேண்டும். தேவையற்ற தங்க கொள்முதல்களை தவிர்க்க வேண்டும். கூட்டு பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இத்தகைய முயற்சிகள், இந்தியாவின் நிலைத்தன்மையை, மேலும் வலுப்படுத்தி, சுயசார்பு இந்தியாவை நோக்கி, முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.