மின்சார பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்.. - அமைச்சர் சிவசங்கர்..

 
Sivasankar

புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.

மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளை தனியார் இயக்க அனுமதி வழங்கப்படுவதாக அண்மையில் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க  அறிவுரை வழங்குவதற்கான ஆலோசகர் பணிக்கு அண்மையில் டெண்டர் கோரப்பட்டிருந்தது.  இதற்கு பல்வேறு   தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அத்துறை அமைச்சர்  சிவசங்கர்  பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.

bus

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கியின் கருத்துருபடி, ஜிசிசி முறையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து, ஒப்பந்த அடிப்படையில் மாநகரப் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தொழிற் சங்கத்தினரின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,500 புதிய மின்சாரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும்.” என்று தெரிவித்தார்..