தமிழகம் முழுவதும் இலவசப் போக்குவரத்து! – வாக்குச்சாவடிக்குச் செல்லத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி ஏற்பாடு..!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பேருந்து வசதி, பிக்அப் டிராப் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.
கன்னியாகுமரி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஏப்ரல் 23ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் இணைந்து தேர்தல் நாளன்று வாக்களிக்கச் செல்லும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண் வாக்காளர்களான மூத்த குடிமக்கள். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கள் கட்டணமில்லா சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட ஆண் வாக்காளர்களான மூத்த குடிமக்கள், பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இந்த வசதி பொருந்தும். மேலும் மேல்குறிப்பிட்ட தகுதியான வாக்காளர்களை பேருந்துகளில் ஏற்றுவதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும், கனிவுடன் நடந்து கொள்ளுமாறும், தேர்தல் நாளன்று பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டுமென அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று வாக்களிக்கச் செல்லும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் சாதாரணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கண்பார்வை குறைபாடுய மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை, வாக்காளர் பூத் சீலிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை காண்பித்து சாதாரண நகரப் கட்டணமில்லாமல் பயணம் பேருந்துகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளன்று மூத்துக்குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி வேண்டி Shaksham App in ECINet மற்றும் 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் பதிவு செய்யலாம். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்தடைய வாகன வசதி தேவைப்படுவோர் Shaksham App in ECINet மற்றும் 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் பதிவு செய்யலாம்.
செங்கல்பட்டு
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டனாமில்லா பேருந்து பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகள் (PwD) மற்றும் முதியோர் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை எளிதாக செலுத்துவதற்காக, வாக்குப்பதிவு நாளான 23.04.2028 அன்று இலவச Pick up & Drop (வீட்டில் இருந்து அழைத்து வந்து, வாக்களித்த பின் மீண்டும் வீட்டில் விடும்) சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் கீழ், மாவட்டம் முழுவதும் அரசு வாகனங்கள் தொகுதி வாரியாக முக்கிய இடங்களில் நியமிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வாக்காளர்களை அவர்கள் இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று, வாக்களித்த பின் மீண்டும் அவர்களின் இல்லத்திற்கே பாதுகாப்பாக சேர்த்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாக்காளர்கள் கீழ்க்கண்ட வழிகளின் மூலம் முன்பதிவு செய்யலாம்:
1. Saksham App (ECINet)
2. 1950 உதவி எண் (Helpline)
கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்
047-வாணியம்பாடி - 04174-234488
048-ஆம்பூர் - 04174-244255
049-ஜோலார்பேட்டை - 04179-242499
050-திருப்பத்தூர் - 04179-220088
மாவட்டக் கட்டுப்பாட்டு அறை (Control Room)
இலவச தொலைபேசி எண் - 18004257008, 04178-221002, 04179-221003, 04179-221005, 04179-221007,
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.


