அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஜாக்பாட்- ஷூ, ஸ்வெட்டர், ரெயின்கோட், ஜாமெட்ரி பாக்ஸ் ஃப்ரீ
வரும் 2027-28 கல்வியாண்டுக்காக தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அத்தனை பொருட்களும் வழங்க தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2 மெகா டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
வெல்க்ரோ செருப்பு, ஷூஸ், கம்பளி ஸ்வெட்டர், மழைக்கோட், கணுக்கால் பூட்ஸ், கிரையான்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில்,சாக்ஸ் ஆகிய 9 பொருட்கள் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 1985-ல் எம்ஜிஆர் ஆட்சியில் தொடங்கப்பட்டு, 2012-13-ல் ஜெயலலிதா அரசால் செருப்பு, பேக், ஜியோமெட்ரி பாக்ஸ் என விரிவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் கோல்டன் திட்டம்.
தமிழகம் முழுவதும் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். குறிப்பாக மலைப்பகுதி மாணவர்களுக்கு பயனடைகின்றனர். இந்த முறை ரூ.52.05 கோடியில் ஷூவுக்கு ரூ.37.24 கோடி, சாக்ஸுக்கு ரூ.9.7 கோடி. மலைப்பகுதியான நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 91,771 மாணவர்களுக்கு செர்ரி சிவப்பு நிறத்தில் ரெயின்கோட் (ரூ.3.32 கோடி) மற்றும் கம்பளி ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க, இடைநிற்றலை தடுக்க, கொக்கிப்புழு போன்ற நோய்களில் இருந்து காக்கவே இந்த திட்டம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

