நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் -தமிழக அரசு

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் -தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தது.

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் -தமிழக அரசு

அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் -தமிழக அரசு

இந்நிலையில் அனைத்து அரிசி அட்டைத்தாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை அடுத்த மாதம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.