அசத்தல் அறிவிப்பு... புகார் அளித்தால் ரூ.1,000க்கு இலவசமாக பாஸ்டேக் ரீ சார்ஜ்!
Oct 14, 2025, 21:00 IST1760455807081
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகள் குறித்து "ராஜ்மார்க் யாத்ரா" செயலியில் புகார் அளிக்கலாம். அசுத்தமான கழிவறைகளின் புகைப்படங்களை இடம், நேரத்துடன் "ராஜ்மார்க் யாத்ரா" செயலியில் பதிவிட வேண்டும். அசுத்தமான கழிவறைகள் குறித்து புகார் அளித்தால் இலவசமாக ரூ.1,000-க்கு பாஸ்டேக் ரீ சார்ஜ் செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
அசுத்தமான கழிவறைகள் தொடர்பாக புகார் அளிக்கும் திட்டம் அக்.31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை சுங்கக் கட்டணமாக மட்டுமே பயன்படுத்த முடியும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.


