பொங்கலுக்கு புதிய ரகத்தில் இலவச வேட்டி, சேலை- தவெக அரசு அதிரடி
விலையில்லா வேட்டி, சேலை திட்டம் தொடர்கிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நியாய விலை கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் , விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்யும் பொருட்கள் இயக்கும் நிலை குழுவினை தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000படி அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கில் இலவச வேட்டி சேலைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி அளித்துள்ளதுடன் முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பயனாளர்களுக்கு வழங்க 2.27 கோடி வேட்டிகள், 2.27 கோடி சேலைகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

