கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்
மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.கஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வரும் துணையாளர்கள் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதரண கட்டண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பேருந்து வசதி உள்ள மலைப்பகுதிகளில் (served area) 35 கி.மீ வரையிலும், பேருந்து வசதியில்லா பகுதிகளில் ( un served area ) 40 கி.மீ வரையிலும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் பயனாளின் அடிப்படையில் போக்குவரத்து கழகத்திற்கு மானியமாக வழங்க ரூ.88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


