போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ..

 
போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு -  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ..

போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) அரசுத் துறைகளில் பல்வேறு படிநிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ,  தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி, குரூப் 1 , குரூப் 2 தொடங்கி குரூப் 8 வரை அரசுப் பணியின் படிநிலைகளுக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு தயாராக  தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

 ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண் பதிவிட  தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு - தேசிய தேர்வு முகமை

போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 பேருக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.  www.civilservicecoaching.com-ல் மார்ச் 31வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த  கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்.10ம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளன!