"அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி என்று வதந்தி பரப்பாதீர்" - அன்புமணி

 
anbumani ramadoss

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, மகளிருக்கு வழங்குவதைப் போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் கொடுக்க வேண்டும்; பிறகு படிப்படியாக, வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுப்படுத்த வேண்டும் அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள்.

Anbumani Ramadoss

மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் இறக்கும் சூழல் உள்ளது; இதனைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்; அது யார் என இப்போது சொல்ல முடியாது. தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை;  கூட்டணி தொடர்பான பா.ம.க. நிலைப்பாட்டை நாங்கள் விரைவில் தெரிவிக்கிறோம் என்றார்.