தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து - முதல்வர் ஆலோசனை

 
அ

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவாக்குவது, மின் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிப்பது, போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் ஆலோசித்தார். பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்க ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தவும் தவெக அரசு திட்டமிட்டுவருகிறது.