மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி
Mar 7, 2025, 16:25 IST1741344905672

பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை இன்று கட்டணம் இன்றி பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி வெண்ணெய் உருட்டு பாறை, அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், புலிகுகை ஆகியவற்றை கட்டணமில்லாமல் சுற்றிப்பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.