தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி- இதுவரை 177 புகார்கள்

 
அரசக்குமார்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன.


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தர லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் புகார்களும் அளிக்கப்பட்டன. புகார்களில் முறைகேடு, பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட ரு.100 கோடி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில், இந்த விவகாரத்தில் பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாக முத்துக்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில் திமுக நிர்வாகியும், தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.200 கோடி வரை பணம் மோசடி என தகவல் வெளியாகியுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் மீதான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூபாய் 100 கோடி மோசடி செய்த வழக்கு தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முத்துக்குமாரை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பி. டி. அரசகுமார், ஆரோக்கியராஜ், மற்றும் சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்