போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி- பெண் தொழிலதிபர் கைது

 
கைது

காரைக்காலில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பெண் தொழிலதிபர் புவனேஸ்வரி விசாகபட்டினத்தில் கைது செய்யப்பட்டார்.

Image
காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டவர் புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜெரோம். கடந்த 2 வருடங்களாக இவர் தனது காதலியுடன், பெண் தொழிலதிபரான புவனேஸ்வரி வீட்டில் தான் தங்கியுள்ளார். இதனால், ஜெரோமின் மனைவி தனது கணவர் மற்றும் புவனேஸ்வரி மீது போலீசில் புகாரும் கொடுத்தார்.

இறுதியில் இது தொடர்பாக வழக்கு பதிவாகி, ஜெரோம் மீது காவல்துறை நடவடிக்கையாக அவர் இரு வருடங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் புதுச்சேரியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புவனேஸ்வரியின் வீட்டில்தான் ஜெரோம் இருந்ததுள்ளார். இருவரும் சொகுசு காரில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். 

இந்நிலையில் காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த  வழக்கில் இதுவரை சப் இன்ஸ்பெக்டர் ஜெரோம் உள்பட 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இதில் மூளையாக செயல்பட்ட புவனேஸ்வரியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காரைக்கால் எஸ்எஸ்பி யோகஸ்வரன், தப்பியோடிய புவனேஸ்வரியை பிடிக்காமல் காரைக்காலுக்குள் நுழைய கூடாது என்று தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேடுதல் பணியை தனிப்படை போலீசார் தீவிர படுத்தினர். 

போலி தங்க நகையை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி…

அப்போது ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நிலக்கரி தொழிலதிபர் வெங்கடேஸ்வரன் என்பவரிடம் புவனேஸ்வரி தஞ்சம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார்  விசாகப்பட்டினம் விரைந்து சென்று வெங்கடேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் புவனேஸ்வரியை தங்க வைத்து இருப்பதாக தெரிவித்தார். இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், அறையில் இருந்த புவனேஸ்வரியை கைது செய்து இன்று காலை காரைக்கால் அழைத்து வந்தனர்.