நாழு தழுவிய பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை..!!

 
chennai bus chennai bus

தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித பாதிப்பும் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்கு குறித்து அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  அவர் தனது உத்தர்வில்,  வழக்கமாக இயக்கப்படும் தினசரி கால அட்டவணையின் படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,   பேருந்துகள் பணிமனைக்கு உள்ளே தான் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.   பேருந்துகள் இயக்கப்படுவதை தடுத்தால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவலை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Strike

பேருந்துகளை இயக்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள  அவர்,  மாணவர்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து வழித்தடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  போக்குவரத்து கோட்ட  அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரியை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதை மேலான இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  

இந்தநிலையில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டாலும், தமிழகத்தில் பேருந்துகள் சீரான அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. போதிய அளவு பேருந்துகள் இல்லாததால்  காலை பீக் ஹவர்ஸ் நேரத்தில்  பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்கள், வேலைக்குச் செல்பவர் சிரமங்களை சந்திக்க நேரிட்டது.  பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால் அத்தியாவசிய  தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.