தமிழ்நாடு அரசிடம் ஊதியம் பெறப் போவதில்லை - முன்னாள் நீதிபதி

 
tn

தமிழ்நாடு அரசிடம் ஊதியம் பெறப் போவதில்லை என முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையி மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாசி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழுங்கி வருகிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது. மாநில பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றவற்றை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்படும். உயர் மட்ட குழுவில் அசோக் வரதன் செட்டி, நாகநாதன் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இடைக்கால அறிக்கை ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என கூறினார். 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசிடம் ஊதியம் பெறப் போவதில்லை என முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள், அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு என்னை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என கூறினார்.