சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 
stalin

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்  பரமசிவம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

stalin

இதுதொடர்பாக திமுக  தலைவர் – முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.

வானூர் சட்டமன்றத் தொகுதி கழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. பரமசிவம் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன்.


திரு. பரமசிவம் அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும் மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் ஆவார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.