அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியும் - மாஃபா பாண்டியராஜன்

 
mafa pandiarajan mafa pandiarajan

அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 

விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்தது குறித்தும், இணைந்து பணியாற்ற போவதாக கூறியுள்ளது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:  ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். இரண்டு பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலிமை பெற்றுள்ளது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும். மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.  

தொடர்ந்து பேசிய அவர், விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்காபுரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதற்கான இடத்தை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக தி.மு.க. அரசு பொய் பிரசாரம் செய்கிறது. இவ்வாறு கூறினார்