யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் - ஜெயக்குமார் பேட்டி

 
jayakumar

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைப்படங்களில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:
 லியோ படத்தில் இடம் பெற்ற ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றதோ அதே அளவுக்கு சர்ச்சையையும் கிளப்பியது. அதற்கு காரணம் பாடலில் இடம் பெற்ற ‘விரல் இடுக்குல தீ பந்தம்’ என்ற வரி. “ விரல் இடுக்குல தீ பந்தம் அப்படினா சிகரெட்டாக தான் இருக்க வேண்டுமா? ஏன் அது பேனாவா இருக்கலாம்ல, ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க’ ஏன் அது கூல்லாக இருக்கலாம்ல, சினிமாவ சினிமாவா பாருங்க, பள்ளி, கல்லூரி பக்கத்துல கூடதான் டாஸ்மார்க் இருக்கு அதுக்காக டெலியி ரெண்டு ரவுண்ட் அடிச்சிட்டா பள்ளிக்கு போறாங்க. மக்கள் தான் மன்னர்கள், நான் அதை நிறைவேற்றும் தளபதி. எனக்காக அளவில்லா அன்பை கொடுத்த மக்களுக்கு நிச்சயம் எதாவது செய்வேன். இவ்வாறு கூறினார். 

jayakumar

நடிகர் விஜயின் இந்த பேச்சு அவரது அரசியல் வருகையை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என கூறினார். இந்த நிலையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி ஆரம்பிக்கலாம்; கட்சி தொடங்குவது பெரியதல்ல, மக்கள் செல்வாக்கை பெறுவதுதான் முக்கியம்; யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.