முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு - ஜெயக்குமார்

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டைப் போல் வட மாநிலங்கள் கவனம் செலுத்தவில்லை என ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.