தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது - திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

 
srinivasan

அதிமுக பொதுக்குழு வழக்கில் தர்மத்தின் பக்கம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார. 

அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

supreme court


 
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: இந்த தீர்ப்பு தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடவுள் எங்கள் பக்கம் உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா எங்களை வழிநடத்திச்செல்கிறது. தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இனி அ.தி.மு.கவுக்கு தொடர் வெற்றிகள்தான் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம் பொய்யாக ஒரு அணியை உருவாக்கி பொம்மை போல் செயல்பட்டு வந்தார். இன்று காலை 10.30 மணியுடன் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அவருடன் கடைசியாக இருந்த 106 பேர்களும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி எந்த வழக்கும் தொடர முடியாது.