ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் காலமானார்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், “இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் (92) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்றறிந்து வருத்தமடைந்தேன். இந்திய ரிசர்வ் வங்கியின் 18-ஆவது ஆளுநராகவும், அதற்கு முன்பாக 1985-89 வரையில் ஒன்றிய நிதித் துறைச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றவர் திரு. வெங்கிடரமணன் அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும் முன்னாள் தலைமைச் செயலாளருமான திருமதி கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.