"உண்மைதான் திருப்பதியில் ரூ.100 கோடியை திருடினேன்..." - கண்ணீருடன் வீடியோ

 
தேவஸ்தான முன்னாள் ஊழியர் தேவஸ்தான முன்னாள் ஊழியர்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில், ரூ.100 கோடியை திருடியது உண்மைதான் என உண்டியல் காணிக்கை திருட்டு புகாரில் சிக்கிய தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் வீடியோ மூலம் கண்ணீர் மல்க ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார், “திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில், ரூ.100 கோடியை திருடியது உண்மைதான். சொத்தில் 90 சதவீதத்தை ஏழுமலையானுக்கு எழுதி கொடுத்துவிட்டேன். என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள்.. வேறு சிலருக்கு நான் பணம் கொடுத்ததாகவும், வேறு சில வகைகளில் எதையோ கொடுத்ததாகவும் கூறும் தகவல்களில் உண்மையில்லை. காணிக்கை பணத்தை திருட அந்தரங்க பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என பரவும் தகவலிலும் உண்மையில்லை. நீதிமன்றம் எத்தகைய ஆய்வுக்கு உத்தரவிட்டாலும், அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள். நானும் என் குடும்பத்தாரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.