அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்!!

 
tn

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodiஅவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு  @kishanreddybjp, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Gen_VKSingh மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP, @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்களை மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.