தமிழக அரசியலில் பரபரப்பு : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கட்சியில் இருந்து நீக்கம்..!

 
1

முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதியை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். வளர்மதி (முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் 2015 இடைத்தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எஸ்.வளர்மதி வெற்றி பெற்றார். 2016 முதல் 21 வரை அதிமுக அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.