அண்ணாமலை மீது முன்னாள் நிர்வாகி போலீசில் புகார்!

 
yn

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Annamalai

கோவையில் தான் நடத்தி வரும் உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள போதே தனது உணவகத்தில் உள்ள பொருட்களை அள்ளி சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Annamalai

கோவை சாய்பாபா காலனியில்  பழைய சோறு டாட் காம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் இவர் கோவை ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.  தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியதுடன் , உணவகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை பாஜகவினர் அள்ளி சென்று விட்டனர் என்றும் கூறியுள்ளார்.  உணவகம் அபகரிக்கப்பட்டதில் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு உள்ளது என்றும் , அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார் . எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையரை அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.  எனவே இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.