#BREAKING காட்டுத்தீ எதிரொலி- சதுரகிரி மலையேறத் தடை

 
sathuragiri

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் பகுதியில் தொடர்ந்து காட்டுத் தீ எரிவதால், பாதுகாப்பு கருதி நாளை பக்தர்கள் மலையேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SADHURAGIRI


ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று  முதல் (10ம் தேதி முதல் 14-ந் தேதி வரை) 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இன்று காலை அனுமதி அளித்தது. யானைகஜம் பகுதியில் குடிநீர், தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஆனால் திடீரென சதுரகிரி சுந்தரமகாலிங்க சாமி கோயில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் இன்று காட்டுத்தீ பரவியதை அடுத்து அதனை அணிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி நாளை சதுரகிரி மலையேற அனுமதியில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். அதேசமயம் நாளை மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று காட்டுத்தீயின் தன்மையை பொறுத்து, அனுமதி வழங்க முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.