அவலாஞ்சி அணை அருகே 2 பெண் புலிகள் உயிழந்த சம்பவம் - வனத்துறை அறிக்கை

 
முதுமலை அருகே புலி தாக்கியதில் மலைவாழ் பெண் பரிதாப பலி; பீதியில் மக்கள்!

நீலகிரி அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே  2 பெண் புலிகள் உயிழந்த சம்பவம் தொடர்பாக முதுமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 9.9.2023 அன்று மாலை 4.30 மணியளவில் அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் பணியாளர்கள் தெரிவித்தனர். உடனடியாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவரது தகவலின்படி, இரண்டும் பெண் புலிகள். வாய்க்காலில் ஒன்று இறந்து கிடக்கிறது. மற்றொன்று வாய்க்காலின் மேல் கரையில் உள்ளது. இரண்டு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம். திரு. தேவராஜ் IFS, ACF (HQ) தலைமையில் 20 பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை தணிக்கை செய்து வருகிறது. இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாமோ என களத்தில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.


தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிதலின் படி இன்று 10.9.2023 காலை பிரேத பரிசோதனை செய்யப்படும். மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இரண்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.