நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக 3 நாட்களில் பதிலளிக்க வனத்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.
சமீபத்தில் லார் கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கினார். இந்நிலையில் லார் கிப்பன் ரக குரங்குகள் பற்றிய விவரங்களை அடுத்த 3 நாட்களுக்குள் நேரில் வந்து ஒப்படைக்குமாறு நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லார் கிப்பான் குரங்கு குறித்த ஆவணங்களை நாளை மாலைக்குள் சமர்பிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குரங்கு ட்தற்போது எங்கே உள்ளது மற்றும் அதன் உரிமையாளர் யார் என்பன உள்ளிட்ட ஆவணங்களை நேரில் வந்து சமர்பிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லார் கிப்பான் (Lar Gibbon) என்பது தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய வகை சிறிய மனிதக்குரங்கு (Lesser Ape) இனமாகும். இவை பொதுவாக 'வெள்ளைக் கை கிப்பான்' (White-handed gibbon) என்றும் அழைக்கப்படுகின்றன. மற்ற சாதாரண குரங்குகளைப் போல லார் கிப்பான்களுக்கு வால் கிடையாது. இவை மனிதக்குரங்கு (Ape) வகையைச் சேர்ந்தவை. இவற்றின் கைகளும் கால்களும் வெள்ளை நிற உரோமங்களால் சூழப்பட்டிருக்கும். முகத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற உரோம வளையம் காணப்படும். இவை மரங்களின் உச்சியிலேயே (Arboreal) தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை கழிக்கின்றன. மரத்திற்கு மரம் கைகளை வீசி தாவிச் செல்வதில் (Brachiation) மிகவும் வல்லவை. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இவற்றின் தாயகமாகும்.

