"தடய மரபணு தேடல் மென்பொருள்" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!!

 
stalin

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தமிழ்நாடு தடய அறிவியல் துறையாழ் உருவாக்கப்பட்டுள்ள தடய மரபணு தேடல்  மென்பொருளை வெளியிட்டார். 

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல ,பெருகி வரும் பல்வேறு குற்றங்களையும் சட்டச் சிக்கல்களையும் ,அறிவியல் பூர்வமாக துல்லியமாக தீர்க்கும் பணியில் தமிழ்நாடு தடய அறிவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.  இத்துறையின் 14 பிரிவுகளில் ஒன்றான டிஎன்ஏ பிரிவு வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன், மனிதனில் காணப்படும் கைரேகை போன்று தனித்துவம் மிக்க பகுதியின் துணை கொண்டு, பெற்றோர் குழந்தைகள் மரபுவழி தொடர்புகளை கண்டறிதல் ,அடையாளம் தெரியாத பிரேதங்களை மரபணு மூலம் கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்தல்,  கொலை கற்பழிப்பு மற்றும் கொலை கொலை முயற்சி சார்ந்த வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறிதல், குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டறிதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

stalin

இந்நிலையில் டிஎன்ஏ பிரிவில் தடய மரபணு தேடல் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இப்புதிய தடய மரபணு தேடல் மென்பொருள் மூலமாக கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு செய்ய ஆய்வு செய்து, ஆய்வு மூலம் உரிய பெற்றோரிடம் ஒப்படைத்து, மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல்,  தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை  கண்டறிதல், இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும் துரிதமாக மேற்கொள்ள இயலும்.

ttn

இதற்கான நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.