"இந்த பயணம் வெற்றிகரமாக முடியும் ; அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வரும்" - முதல்வர் ஸ்டாலின் பேட்டி

 
tn

முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று செல்கிறார்.   இதன் காரணமாக விமான நிலையம் செல்வதற்கு முன்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

tnt

இதை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு அமைச்சர்கள் பலரும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் புறப்படும் முன்பு சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ," உலக சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவே  ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறேன். 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் , ஜப்பான் சென்று தொழிலதிபர்களை சந்திக்கிறேன். ஜூலை 2021 முதல் 226 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.

tn

பெரு நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளேன். சிங்கப்பூர் பயணத்தின் போது புதிய தொழில்நுட்பங்கள் கையெழுத்தாக உள்ளன.  துபாய் பயணத்தின் போது கிடைக்கப்பெற்ற 6100 கோடி முதலீடுகள் மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாகின. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் 2.95 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த பயணம் வெற்றிகரமாக முடியும். அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் "என்றார்.