"காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம்" - இளைஞர் தற்கொலை!!
காதலித்த பெண்ணுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 27 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து உள்ளார். ஆனால் ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது . காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் மறுத்ததால் பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் நேற்று காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக ராதாகிருஷ்ணன் தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி, பெண்ணின் உறவினர் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் உறவினர்கள் ஐந்து பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ள அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது கடிதத்தை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.