ஓசூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்- மேலும் இருவர் கைது

 
ச்

ஓசூர் அருகே குழந்தை திருமணம் செய்து வைத்து வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் வீடியோ வெளியான நிலையில், சிறுமியின் கணவன்,பெண்ணின் பெற்றோர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே ஏராளமான மலை கிராமங்கள் உள்ள நிலையில், 7 ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமிக்கும் காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஷ்(30) என்பவருக்கு கடந்த 3ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில்  திருமணமான நிலையில் நேற்று சிறுமி கணவர் வீட்டிற்கு வந்தபோது திருமணத்தில் விருப்பமில்லை எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி செல்வதும் சிறுமி கதறி அழுவதுமான வீடியோ வெளியானது.

இந்நிலையில்தேன்கனிக்கோட்டை மகளிர் போலிசார் கணவர் மாதேஷ்(30), கணவரின் அண்ணன் மல்லேஷ், சிறுமியின் தாயார் நாகம்மா ஆகிய மூவரை கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை முனியப்பா, கணவரின் அண்ணி முனியம்மாள் ஆகிய 2 பேர் என மொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் சிறையில் அடைத்தனர்.