அடுத்த 5 வருஷத்துக்கு உதயநிதி கதறப்போறதை ரசிக்கலாம்! – திமுக-வை வறுத்தெடுத்த கஸ்தூரி..!
பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி அளித்த பேட்டி;
திமுகவினர் திட்டுகிறார்கள் என்றால் விஜய் ஆட்சியில் ஏதோ நல்லது செய்கின்றனர் என்று அர்த்தம். டாஸ்மாக் மூடுகின்றனர் என்பதே நல்ல விஷயம் தான். அதில் முன்னே பின்னே இருந்தாலும் கூட, இது புதிய ஆட்சி தானே, விஜய் அரசுக்கு அறிவுரை சொல்ல மூத்த கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி கூடுதலான கவனம் தருவது நல்ல விஷயமே.
திருவொற்றியூரில் டாஸ்மாக் கடையை மூடிய போது, சாலையையே குடிமகன்கள் கடையாக மாற்றி விட்டனர். எல்லா விஷயத்திலும் அரசாங்கத்தையே எதிர்பார்க்க முடியாது. 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பழகிவிட்டனர். மக்களையும் மாற்ற வேண்டும். எனக்கு தெரிந்து கொஞ்சம் காலம் ஆகும். அதை நாம் தரவேண்டும். என்னை பொறுத்தவரை விஜய் ஆட்சியில் எண்ணம் இருக்கிறது, ஆனால் அதற்கான செயல்பாடுகளுக்கு கொஞ்சம் காலம் தரவேண்டும். நாமும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகள் மாறுவது இல்லை. ஆட்சி மாறலாம் ஆனால் காட்சி மாற நேரம் ஆகும். விஜய் அரசில் எல்லோருமே புதிது. கட்டமைப்பு இருக்க வாய்ப்பே இல்லை. எம்எல்ஏ வெற்றிச் சான்றிதழையே அந்த பெண் (அமைச்சர் கீர்த்தனாவை குறிப்பிடுகிறார்) வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார். எனக்கு அந்த பெண்ணை 3 மாதமாக தெரியும்.
எனவே யாருக்கும் எதுவுமே கிடையாது. அது தப்பும் கிடையாது. நல்லது தெரியாது என்று திட்டலாம், ஆனால் அவர்களுக்கு தப்பும் தெரியாது என்பதுதானே உண்மை.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெக ஆதரிப்பது என்பது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் நான் பார்க்கிறேன். தோற்றாகிவிட்டது... அதிலும் அதிபயங்கரமான தோல்வி. ஒரு ஓட்டு வித்தியாசத்திலும் தோற்றுவிட்டார்கள், 83 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் தோற்றுவிட்டனர்.தோற்றதை ஒப்புக்கொள்ள முடியாமல் உதயநிதி அடுத்த 5 ஆண்களுக்கு கதறுவதை நாம் கேட்டு ரசிக்கலாம். இதற்காகவே நான் விஜயின் பெரும் ரசிகையாக ஆகிவிட்டேன்.
இவ்வாறு கஸ்தூரி பேட்டி அளித்தார்.

