தமிழகத்தில் முதன்முறையாக தனித்து 10% வாக்கை கடந்தது பாஜக

 
 அண்ணாமலை

இந்தியாவில் இதுவரை 85 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு

அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 243 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் சுமார் 100 இடங்களில் வெற்றி கண்டுள்ளனர். 272 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், 37 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 5% வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன. 35 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி 5% வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன.  19 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி 2% வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன. தே.ஜ. கூ- இந்தியா கூட்டணி இடையே சுமார் 60 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசம் உள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக இந்தத் தேர்தலில் வெல்லவில்லை. ஆனால் 2019ல் பெற்ற 19% வாக்கு வங்கியை விட 1% கூடுதலாக பெற்றிருக்கிறது. தன் வாக்கு வங்கியை அதிமுக தக்க வைத்துக்கொண்டது. பாஜக 10.71% வாக்கு வங்கியை பெற்றுள்ளது. திமுக 25.75% சதவீதமும், காங்கிரஸ் - 10.68% வாக்குகளை பெற்றுள்ளது.