அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு... அரசு முக்கிய அறிவிப்பு : புதிய e-KYC விதி..!

 
1 1

ரேஷன் பொருட்களைத் தொடர்ந்து பெற, இனி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை e-KYC செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் e-KYC அப்டேட்-ஐ எளிதாக முடிக்க 'மேரா ரேஷன்' (Mera Ration) மற்றும் 'ஆதார் ஃபேஸ் ஆர்டி' (Aadhaar Face RD) ஆகிய இரண்டு செயலிகளைப் பயன்படுத்த அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ரேசன் அட்டை e-KYC ஆன்லைன் மூலம் செய்வது எப்படி?

- முதலில் உங்கள் மொபைலில் Google Play Store-லிருந்து ‘Mera Ration’ மற்றும் ‘Aadhaar Face RD’ ஆகிய இரண்டு செயலிகளையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

- Mera Ration செயலியைத் திறந்து உங்கள் இருப்பிடத்தை (Location) பதிவு செய்யவும்.

- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை நிரப்பி, OTP மூலம் சரிபார்க்கவும்.

- அதன்பிறகு உங்கள் ஆதார் தொடர்பான தகவல்கள் திரையில் தோன்றும்.

- அடுத்து Face e-KYC விருப்பத்தைத் தேர்வு செய்யவும். 

- பின்னர் கேமரா ஓபன் ஆனதும் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யவும். 

- Aadhaar Face RD என்ற செயலி தானாகவே உங்கள் முகத்தை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கும்.

- வெற்றிகரமாக உங்கள் முகத்தை ஸ்கேன் செய்த பிறகு, சில வினாடிகளில் உங்கள் e-KYC செயல்முறை நிறைவடையும்.

e-KYC வெற்றிகரமாக முடிந்ததா எனச் சரிபார்ப்பது எப்படி?

- மீண்டும் Mera Ration செயலியில் உள்நுழையவும்.

- உங்கள் இருப்பிடம் மற்றும் ஆதார் எண் விவரங்களை நிரப்பி, பின்னர் OTP-ஐ உள்ளிடவும்.

- அதன்பின்னர் திரையில் தோன்றும் நிலையை (Status) கவனிக்கவும்:

- நிலை 1 (YES) எனத் தோன்றினால், உங்கள் e-KYC வெற்றிகரமாக முடிந்தது என அர்த்தம்.

- நிலை 2 (NO) எனத் தோன்றினால், உங்கள் e-KYC அப்டேட் இன்னும் முழுமையடையவில்லை என்று அர்த்தம். மேலும் நீங்கள் ரேசன் கரடு கார்டு அப்டேட் செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும்.