கால்பந்து ரசிகர்கள் உற்சாகம்..! இன்று இந்தியா வருகிறார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி..!
நீண்ட கால கிளப் அணி நண்பர், உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் என மூன்று பேர், இவருடன் வருகின்றனர். கோல்கட்டா, இ.எம் பைபாஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
காலையில் உலக கோப்பை தாங்கிய மெஸ்ஸியின், 70 அடி உயரமுள்ள முழு உருவச்சிலையை இணைய வழியில் திறந்து வைக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பின் சால்ட்லேக் மைதானத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இன்று மதியம் 2:00 மணிக்கு ஐதராபாத் செல்கிறார். நட்பு போட்டி ரத்தானதால், தெலுக்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உள்ளிட்ட தலா 7 பேர் பங்கேற்கும் காட்சி போட்டியில் விளையாடுகிறார்.
இரண்டாவது நாள் மும்பை செல்கிறார். மாலை 5:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவில் 45 நிமிடம் 'பேஷன்' நிகழ்வு நடக்கும். இதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மூன்றாவது நாள் (டிச. 15), டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.


