உணவில் விஷம்- 5 வயது குழந்தை பலி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருக்கு போராட்டம்

 
ச் ச்

ஓசூர் அருகே விஷம் கலந்த  உணவை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரில் 5 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அனைவரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மயக்கம் ஏற்படவே அருகே உள்ள பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து இன்று காலை மயக்கத்துடன் வாயில் நுரை தள்ளியவாறு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இதில் 5 வயது குழந்தை அயன் என்பவன் மட்டும் இறந்துள்ளான். மயக்க நிலையில் இருந்த ரிஷ்வான் (40), மனைவி சல்மா (35) , முஷாரத் கத்தூன் (17), சாகில் (15) ஆகியோருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

முதற்கட்டு விசாரணையில் உணவு சாப்பிட்டதில் மயக்கம் ஏற்பட்டதாக சிறுவன் தெரிவித்தான். ஆனால் உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உணவில் விஷம் கலக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடும்பத்தில் தகராறு நடந்ததாக தெரியவந்துள்ளதால், விஷம் கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சியா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.