நாமக்கல்லில் Swiggy, Zomato நிறுவனங்களுக்கு உணவு விநியோகம் நிறுத்தம்
நாமக்கல் தாலுக்காவில் இன்று முதல் Zomoto, Swiggy ஆன்லைன் நிறுவனங்களின் ஆர்டர்களை எடுக்க போவதில்லை என நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளன.

நாமக்கல் தாலுகாவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள், இன்று முதல் Swiggy மற்றும் Zomato நிறுவனங்களுக்கு உணவு வழங்குவதில்லை என அறிவித்துள்ளன. கமிஷன் தொகையை குறைக்காதது மற்றும் மறைமுக கட்டணங்கள் வசூலிப்பது ஆகியவை காரணமாக, நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Zomoto, Swiggy நிறுவனங்கள் கமிசன் தொகையை 35% லிருந்து 18% ஆக குறைக்க வேண்டும், மறைமுக கட்டணம், விளம்பர கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், நிறுவன ஊழியர்களின் நடவடிக்கைகளை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் இன்று முதல் திட்டமிட்டபடி Zomoto, Swiggy நிறுவனங்களின் ஆர்டர்களை எடுக்காமல் புறக்கணிப்பு செய்வதாக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.


