மக்களே குடை எடுத்துட்டு போங்க..! தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

 
rain school

சென்னை வானிலை மையம் அறிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று(ஆக.,14) கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 19ம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தேனி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 20ம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.